பிரமிட் வியாபாரத்தில் ஈடுபட்ட ONMAX DT நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஐவரையும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த ஐவரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (03) ஆஜர்படுத்தினர்.
அத்துடன் இவர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றக் காவலில் வைக்குமாறும், தொலைபேசி உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் பொறுப்பில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரமிட் பண விவகாரம் தொடர்பாக நடந்தப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைதானதுடன் குறித்த நிறுவனம் இலங்கை மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

