ONMAX DT நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஐவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஐவரையும் வெள்ளிக்கிழமை (03) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரமிட் பண விவகாரம் தொடர்பாக நடந்தப்பட்ட விசாரணைகளின் பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிறுவனம் இலங்கை மத்தியவங்கயினால் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


