பிரேசிலின் அமேசன் பகுதியில் ஏற்பட்ட விமான விபத்தில் 12 பேர் பலி

76 0

பிரேசிலின் அமேசன் பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விமானத்தில் பயணித்த ஒன்பது பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை, அத்துடன் விமானி மற்றும் துணை விமானி அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரேசிலின் ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோ பிராங்கோவில் உள்ள முக்கிய விமான நிலையம் அருகே விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக குறிப்பிடப்படுகின்றது.

ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோ பிரான்கோவிலுள்ள முக்கிய விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் அமேசனிலுள்ள Envira மற்றும் Eirunepé செல்லும் வழியில் விமானம் கீழே விழுந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறை கேப்டன் பிரான்சிஸ்கா ஃப்ராகோசோவின் கூறுகையில், விமானம் வெடிப்பிற்குள்ளானதால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை குறைத்துள்ளதாக கூறியுள்ளார்.