படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு

224 0

தொடுவாவ பிரதேசத்தில் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மீனவர்களில் ஒரு மீனவர் காணாமல் போனதையடுத்து அவரது  சடலம் இன்று திங்கட்கிழமை (30) அம்பகடவில கரையோரத்தில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மஹவெவ பிரதேச மட்டகொட்டுவ பகுதியைச் சேர்ந்த ஜோசப் அலோசியஸ் என்ற 65 வயதுடைய திருமணமாகாத நபர் ஆவார்.

மீனவர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுகிழமை காலை (29) மீன்பிடி தொழிலிலுக்காக கடலுக்கு சென்றிருந்த போது படகு கவிழ்ந்ததில் இருவரும் கடலில் வீழ்ந்துள்ளனர்.

இருவரும் தங்களது உயிரை காப்பாற்ற கடலில் நீந்திய நிலையில் ஒரு மீனவர் மற்றுமொரு மீன்பிடி படகினால் காப்பாற்றப்பட்டுள்ளதோடு மற்றைய மீனவர் கடலில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.