ஹோமாகம வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக் கொண்டிருந்த யாசகர் ஒருவரைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (29) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சந்தேக நபர் யாசகர் ஒருவரை பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாகவும், அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (30) காலை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
64 வயதுடைய தர்மதாச என்ற நபரே உயிரிழந்துள்ளார். ஹோமாகம, கலவிலவத்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

