காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு(காணொளி)

258 0

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

வவுனியா ஏ9 வீதியில் வீதியில் வவுனியா அஞ்சல் திணைக்களத்திற்கு அருகில்  முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் நேற்றுடன் 31ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் பெருமளவானோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றர்.

இந்நிலையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையில் கொழும்பிலிருந்து நேரடியாக நேற்று போராட்டம் இடம் பெறும் இடத்திற்கு வருகை தந்திருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் அவர்களின் கவலைகளையும் பிரச்சனைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படவேண்டும் எனவும், இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கேட்டு அவர்களுடைய பிரச்சனையை தீர்க்காமல் காலம் கடத்த முடியாது என தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி கோரி ஜனாதிபதிக்கு தினமும் ஆயிரம் கடிதங்கள் வீதம் அனுப்பிவரும் நிலையில் இலங்கை அசிரியர் சங்கத்தைச் சேர்ந்த உறப்பினர்கள் கடிதம் அனுப்பும் போராட்டத்திலும் கலந்தகொண்டிருந்தனர்.