பரீட்சையில் பார்த்து எழுதிய எம்.பி.

150 0

சட்டக் கல்லூரி அனுமதி போட்டிப் பரீட்சையில் விடைகளை பார்த்து எழுதிய எம்.பி. தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

தென் மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இவ்வாறு பார்த்து எழுதியுள்ளார் என்றும், அதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டக் கல்லூரிக்கான அனுமதி பரீட்சையானது பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படுகிறது. கடும் நிபந்தனைகளுடன் இந்த பரீட்சை  நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த எம்.பி.தான் கொண்டுவந்திருந்த சில தாழ்களில் விடைகளை எழுதி வைத்திருந்து அதனை பார்த்து எழுதியுள்ளார் என்று தகவல்கள் கிடைத்ததன் பின்னர் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த விசாரணைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக அந்த எம்.பி. அரசியல் வாதிகளிடம் கடுமையான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் வினவியபொழுது, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தனக்கும் சில தகவல்கள் கிடைத்துள்ளன என்று தெரிவித்தார்.