கரந்தெனிய இராணுவ முகாமில் காணாமல் போன T-56 ரக துப்பாக்கி, படபொல பகுதியிலுள்ள வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கரந்தெனிய இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கரந்தெனிய இராணுவ முகாமிலிருந்து ரி -56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையிலேயே சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

