வவுனியா – புளியங்குளம் பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டம்

199 0

வவுனியா – புளியங்குளம் வடக்கு முத்துமாரிநகர் மக்கள் ஐந்து அம்ச கோரிக்கையினை முன்வைத்து அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை  ஆரம்பித்துள்ளனர்.

குறித்த போராட்டம் நேற்று (26.10.2023) காலை புளியங்குளம் – வடக்கு முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் கொட்டகை அமைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வவுனியா – வடக்கு பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் மற்றும் புளியங்குளம் வடக்கு கிராம சேவகரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதேச செயலாளர் பதில் வழங்காமைக்குரிய காரணம் என்ன? 15 வருடங்களாக முத்துமாரி நகர் ஏ புளக் காணிகளுக்கு காணிப்பத்திரம் வழங்காமைக்குரிய காரணம் என்ன?

எந்தவிதமான குற்றச்செயல்களும் இல்லாமல் எட்டு இளைஞர்களை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தமைக்கான காரணம் என்ன? என்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள் எமது ஐந்து அம்சக் கோரிக்கைகளிற்கு தீர்வு கிடைக்கும் வரை குறித்த போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.