ஹமாஸ்பிரதிநிதிகள் ரஸ்யா விஜயம் – பணயக்கைதிகள் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை

157 0
image

பணயக்கைதிகள் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பது குறித்த பேச்சுக்களிற்காக ஹமாசின் பிரதிநிதிகள் குழுவினர் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ஹமாஸ்பிரதிநிதிகளின் விஜயத்தினை ரஸ்யா உறுதி செய்துள்ளது.

நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக முக்கிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக  மொஸ்கோ தெரிவித்துள்ளது.

ஹமாசை ரஸ்யா தடைசெய்யவில்லை என்பதுடன் ஹமாஸ் உறுப்பினர்கள் ரஸ்யாவிற்கு பயணங்களை மேற்கொள்வது வழமையான விடயம் எனினும் 7ம் திகதிக்கு பின்னர் ஹமாஸ் பிரதிநிதிகள் ரஸ்யாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

டோகாவில் வசிக்கும் ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் தலைமையிலான குழுவினரே ரஸ்யா சென்றுள்ளனர்.