திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி பூநகர், 20 ஏக்கர் பகுதியில் வியாழக்கிழமை (26) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஈச்சிலம்பற்றில் இருந்து சேறுநுவர நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட பூநகர் சிவன்கோயிலில் பூசகராக பணி புரியும் கே.கஜரூபன் (34வயது) எனவும் தெரியவருகிறது.
உயிரிழந்த பூசகரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

