குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கடமையாற்றுபவர்கள் கடமை நேரங்களில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை

187 0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பல பிரிவுகளில் கடமையாற்றுபவர்களின் கையடக்கத் தொலைபேசிகள் கடமை நேரங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அவை பொறுப்பதிகாரிகளினால் கைப்பற்றப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் விசாரணைகள் தொடர்பான உள்ளக தகவல்கள் அனுமதியின்றி வெளியிடப்படுவதை தடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக உள்ளக தகவல்கள் வெளிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு இந்த தடை விதிக்கப்படாது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் 40 பிரிவுகள் இயங்குகின்ற நிலையில் அனைத்து பிரிவிலும் கடமையாற்றுபவர்களிடம் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.