இலங்கையின் 16 வது இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வு பெற்ற) லயனல் பலகல்ல மரணம்.
அவர் இறக்கும் போது அவருக்கு வயது 75 என இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது இறுதிச் சடங்குகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

