புலம்பெயர்வோருக்கும் மீளவும் எமது நாட்டுக்கு வருகை தருகின்ற புலம்பெயர்ந்தோருக்கும் மற்றும் புலம்பெயர்வதற்கு எதிர்பார்க்கின்றவர்களுக்கும் வெளிநாடுகளில் பயணிக்கும் போது, தொழில் புரியும் போது மற்றும் வசிக்கும் போது எதிர்கொள்ள நேரிடுகின்ற இடர்கள் மற்றும் சவால்களைக் குறைத்துக் கொள்வதற்கு புரிதலுடன் தீர்மானமெடுப்பதற்கு இயலுமை வழங்குவதற்காக, போதியளவான, காலத்தோடு தழுவியதாகவும் மற்றும் நம்பகமான தகவல்கள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்காக கிழக்கு மாகாணத்தில் புலம்பெயர் வளங்கள் நிலையத்தை நிறுவுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியூசிலாந்து அரசு தமது உடன்பாட்டை தெரிவித்துள்ளது. அதற்கமைய, நியூசிலாந்தின் வியாபாரம், புத்தாக்கம் மற்றும் தொழில் அமைச்சின் மூலம் புலம்பெயர் கொள்கை அபிவிருத்தி சர்வதேச நிலையத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 350,000 நியூசிலாந்து டொலர்களை வழங்குவதற்கு அந்நாட்டு அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள நிலையத்தை நிறுவுவதற்காக நியூசிலாந்தின் புலம்பெயர் கொள்கை அபிவிருத்தி சர்வதேச நிலையம் மற்றும் எமது நாட்டின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

