பாதசாரிகள் மீது மோதிய மோட்டார் வாகனம் – இருவர் பலி

156 0

வீதியோரம் நடந்து சென்ற ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்களை விபத்திற்குள்ளாக்கிய மோட்டார் வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது.

எம்பிலிப்பிட்டிய மொரகெட்டிய பிரதான வீதியில் இலுக்கெட்டிய பிரதேசத்தில் இன்று (25) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் எம்பிலிப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  அதில் ஆண் ஒருவரும் பெண்ணொருவரும்  உயிரிழந்துள்ளனர்.

58 மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற மோட்டார் வாகனத்தின் சாரதியை தேடி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, இன்று காலை பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில், ஜா-எலவில் இருந்து போபிட்டிய நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் வீதியில் பயணித்த 27 வயதுடைய நபர் உயிரிழந்தார்.