எமக்கு நிதி வேண்டாம் நீதியே வேண்டும், அதற்காகவே நாம் போராடுகின்றோம் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (25.10.2023) இடம்பெற்றிருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நிதிக்காகவோ, உதவிகளுக்காகவோ நாம் போராடவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்காகவே நாம் போராடி வருகின்றோம். சர்வதேச ரீதியாக நீதியைப் பெற்றுக்கொள்ள எமது போராட்டம் வாய்ப்பாக இருக்கும் என சங்கத்தின் தலைவி குறிப்பிட்டுள்ளார்.

