பழமையும் புராதன தொன்மையும் வாய்ந்த மாத்தளை (A9) வெள்ளைக்கல் அருள்மிகு அழகர் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு நேற்று 25ம் திகதி பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகின. இன்று 26ம் திகதி காலை 8.00 மணிமுதல் சுவாமிகளுக்கு பக்தர்கள் எண்ணெய் காப்பு சாத்திவழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை 27ம் திகதி காலை 5:00 மணிக்கு மகாகணபதி பூஜையுடன் தொடர்ந்து கிரியைகள் நடைபெற்று ஆலய பிரதம சீர்வளர்சீர் சிவ பொன்முடி முருகானந்த தேசிக சுவாமிகள் தலைமையில் மகா கும்பாபிஷேகம்நடைபெற திருவருள் பாலித்துள்ளது.
இன்று எண்ணெய் காப்பு – நாளை 27ம் திகதிகும்பாபிஷேகம்.
இவ் ஆலயத்தினை ஆகம முறைப்படி எல்கடுவ பாலேந்திரன் குழுவினர் மற்றும் உக்குவளை நவரெட்னராஜா குழுவினர் இணைந்து புனர்ருத்தானம் செய்துள்ளனர்.
எனவே வெள்ளக்கல் ஆலய கும்பாபிஷேக கிரியைகளில் பக்த அடியார்கள் கலந்துகொண்டு நாராயண பெருமாளின் திருவருள் கடாத்தை பெற்றுக் கொள்ளுமாறு ஆலய தர்மகர்த்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருக்கோவில் “பிரம்மோத்சவம்’ அல்லது வருடாந்திர திருவிழா பதினைந்து நாட்கள் தமிழ் மாதமான சித்திரையில் (ஏப்ரல்-மே) பௌர்ணமி நாளில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் கருப்பண்ணசுவாமிக்கு சிறப்பு பூஜை உடன் நடைபெறுகிறது.
இக்கோயில் நூற்றாண்டு பழமையானது என்பதால், புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் 12.02.2004 அன்று அடிக்கல் நட்டு 27.01.2010 அன்று வைணவ முறைப்படி முதலாவது கும்பாபிN~கம் நடைபெற்றது.
கோவிலின் நிர்வாகம் தொடக்கத்தில் தாபகர் கொங்கையா சேர்வையால் செய்யப்பட்டது. அவரின் மறைவுக்குப் பிறகு 1925 பின் கோவில் நில உரிமையாளரான குடியார் மாரிமுத்து பொன்னையா முருகையா தேவர் வழித்தோன்றல்களால் நிர்வாகம் தொடர்கிறது. 27ம் திகதி நடைபெறும் கும்பாபிஷேகம் இரண்டாவது கும்பாபிஷேகம்

