திருடர்களை பாதுகாக்கும் ஸ்மார்ட் வேலைத்திட்டம்

134 0

சுகாதாரத்துறையை சீரழித்து தரமற்ற மருந்துகளை கொண்டு வந்து மக்களை கொலை செய்த கெஹலிய ரம்புக்வெல்லவை பாதுகாத்து தற்போது சுற்றாடல் அமைச்சை வழங்கியுள்ளனர். இதுவே ஜனாதிபதி ரணிலின் ஸ்மார்ட் மயமாக்கல். இதன் மூலம் திருடர்களை பாதுகாக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஐக்கிய தேசிய கட்சியின் மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய கறுப்பு நிற ஜெர்சி ஒன்றை அணிந்து கொண்டு ஸ்மார்ட் நவீனமயமாக்கல் தொடர்பில் கருத்து தெரிவித்தார். நாட்டில் உள்ள திருடர்களை பாதுகாப்பதாலும், நாட்டை வங்குரோத்து அடைய செய்தவர்களை பாதுகாப்பதாலும் ரணில் விக்கிரமசிங்க இன்று ஸ்மார்ட் ஆக மாறியுள்ளார்.

சுகாதாரத்துறையை சீரழித்து தரமற்ற மருந்துகளை கொண்டு வந்து மக்களை கொலை செய்த கெஹலிய ரம்புக்வெல்லவை பாதுகாத்து தற்போது சுற்றாடல் அமைச்சை வழங்கியுள்ளார். இதுவே அவரது ஸ்மார்ட் மயமாக்கல். திருடர்களை பாதுகாக்கின்றார். திருட்டில் ஈடுபட்டு வங்குரோத்து அடைந்ததன் பின்னர் அந்த அமைச்சை வழங்குகின்றார். இதுவே அவரது ஸ்மார்ட் மயமாக்கலின் நோக்கம் என நாம் நினைக்கிறோம் என்றார்.