மலேசியாவில் வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழப்பு

167 0

கடந்த சனிக்கிழமை (21) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களது குடிருப்பு பகுதிக்கு அருகில் தம்பதியினர் ஓட்டிச்சென்ற கார் மற்றுமொரு காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிது.

குறித்த விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதுடன், காரில் இருந்த அவர்களின் பிள்ளை உயிர் பிழைத்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 33 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும்,  மலேசியாவில்  மென்பொருள் பொறியாளர்களாக பணியாற்றியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.