சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் மேம்பாட்டுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 165 மில்லியன் டொலர் நிதியுதவி

164 0

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 165 மில்லியன் டொலர்கள் நிதியுதவியுடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தின் கீழ் முதலீட்டு மற்றும் நடவடிக்கை மூலதனத்தை வழங்கவதற்காக அரசாங்கத்தினால் ‘சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான கடன் முன்மொழிவுத் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு வங்கிகளால் நிதி வழங்குவதற்கு முன்னுரிமையளிப்பதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ள நேரிட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வாக தேசிய கடன் பாதுகாப்பு நிறுவனத்தைத் தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமது வியாபாரங்களுக்கு நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொள்கின்ற தொழில் முயற்சியாளர்களுக்காக ‘சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கான நிதித்திட்டம்’ எனும் புதிய கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், அதற்காக முற்கட்டமாக 100 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த கடன்தொகையைப் பெற்றுக் கொள்வதற்கும், அதற்குரிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.