மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் உறுப்பினர் கால்வாயில் விழுந்து மரணம்!

129 0

களுத்துறை  வல்லாவிட உள்ளூராட்சி சபையில் மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் கால்வாயில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெலிபன்னை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் வலல்லாவிட்ட பிரதேசத்தில் போப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஐ.ஏ.வீரசிறி என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் வெலிபன்னை ஊராகொடை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்கு சென்றிருந்த போது அவர் காணாமல் போயுள்ள நிலையில், இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பட்டின் படி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, பொலிஸ் தேடுதல் நடவடிக்கையின் போது அருகில் அமைந்துள்ள கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என பொலிஸார்  தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வெலிப்பன்னை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.