குடு சலிந்துவின் சீடர் ஒருவர் STF யால் கைது

160 0

குடு சலிந்துவின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை அலோபோமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான 1.40 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

பாணந்துறை, திக்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.