ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தல் முயற்சி செய்த வேளை ஐந்து படகுகள் இந்திய கடலோர காவல் படை கைப்பற்றியுள்ளன.
ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கடத்தி செல்வதாக இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, கடல் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கு இடமாக 4 இலங்கை படகும் அதில் இருந்த 8 பேரையும், அதே போன்று மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஒரு படகையும் அதிலிருந்த 4 பேரையும் இந்திய கடலோர காவல் படை மடக்கி பிடித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களிடம் இருந்து உலர்ந்த ஒரு தொகை கடலட்டை மட்டும் மஞ்சள் போன்றவை மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

