மன்னார் சிலாவத்துறை மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட “குவைத் ஸகாத்” (Kuwait Zakath) நிறுவனத்தினால் புதிய இரண்டு மாடிக் கட்டிடத்தின் திறப்பு விழா திங்கட்கிழமை (23) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடைபெற்றது.

கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க “குவைத் ஸகாத் ஹவுஸ்” நிதியுதவியுடன் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதற்காக செலவிடப்பட்ட தொகை 200 இலட்சம் ரூபாவாகும். இப் பாடசாலையில் சுமார் 350 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இரண்டு தளங்களைக் கொண்ட, கீழ் தளத்தில் 3 வகுப்பறைகளும், மேல் தளத்தில் பிரதான மண்டபமும் உள்ளன.

இதன்போது, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், இலங்கைக்கான குவைத் பிரதித் தூதுவர் பத்ர் அல்னோ வைம், குவைத் ஸகாத் ஹவுஸின் பணிப்பாளர் நாயகம் மஜீத் எஸ்.எம்.எஸ். அலசெமி மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.

