கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் காயம்!

173 0

மீகலேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரகொல்ல பிரதேசத்தில்  மிருக வேட்டைக்கு  பொருத்தப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்ததில்  சிறுவன் ஒருவன் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

15 வயது  சிறுவன் ஒருவனே இவ்வாறு காயமடைந்துள்ளான்.

காயமடைந்த சிறுவன் மீகலேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புத்தேகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.

பயிர்ச்செய்கை ஒன்றுக்காக மரக் கிளைகளை வெட்டுவதற்காக நண்பர்கள் இருவருடன் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்ற போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.