யேர்மனி, ஸ்ருற்காட் தமிழாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா 2023 .

281 0

யேர்மன் தமிழ்க்கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான ஸ்ருற்காட் தமிழாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா 2023 மொழியாலும் உணர்வாலும் ஒன்றுபட்டுப் பல புதிய சிறார்கள் எமது தமிழாலயத்தில் இணைந்து கொண்டனர். ஆண்டு ஒன்றில் கற்கும் மாணவர்கள் புதிய சிறார்களை வரவேற்கும் முகமாக அட்டைகள் தாங்கியபடி பாடல்கள் பாடி மகிழ்வித்தனர். ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்குமான பள்ளிப் பைகளை வழங்கி உற்சாகப்படுத்தினர். பெற்றோர்கள் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்ததை நிகழ்வின் போது காணக்கூடியதாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.