யானையொன்று விழுந்தால் அதை எழுப்புவது மிகவும் கடினமாகும் என்று கிராமங்களில் கூறுவர். ஆனால் அந்த யானை தானாக எழுந்து பயணிக்க தொடங்கினால், அந்த பயணத்தை யாராலும் தடுக்க முடியாது. ஐ.தே.க.வும் அதனைப் போன்றதே. அதனை பலம்மிக்க பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐ.தே.க.வின் விசேட சம்மேளனம் கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஐ.நா. அமர்வில் கலந்து கொண்ட போது தான் இந்தியாவுக்கோ, சீனாவுக்கோ ஆதரவானவன் அல்ல என்றும், இலங்கைக்கு ஆதரவானவன் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய தேசிய கட்சியின் அணுகுமுறையையே அவர் அன்று வெளிப்படுத்தினார். ஐ.தே.க.வும் இலங்கையும் வேறு வேறல்ல.
நாடு பலமடைந்திருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐ.தே.க.வும் பலமடைந்திருந்தது. நாடு பலவீனமடைந்திருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐ.தே.க.வும் பலவீனமடைந்திருந்தது. 2020 – 2022 காலப்பகுதி இதற்கு சிறந்த உதாரணமாகும். தற்போது ஐ.தே.க. டிஜிட்டல் மயமாக்கலுடன் புதிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
எம்மிலிருந்து பிரிந்து சென்றவர்கள் கூட, ஐ.தே.க.வின் கொள்கையும், அதன் பாதையுமே சரியானது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். யானையொன்று விழுந்தால் அதை எழுப்புவது மிகவும் கடினமாகும் என்று கிராமங்களில் கூறுவர். ஆனால் அந்த யானை தானாக எழுந்து பயணிக்க தொடங்கினால், அந்த பயணத்தை யாராலும் தடுக்க முடியாது. ஐ.தே.க.வும் அதனைப் போன்றதே. அதனை பலம்மிக்க பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என்றார்.

