ஆதிவாசிகள் நயினாதீவு சென்றனர்

194 0

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு, நேற்றைய தினம் சனிக்கிழமை (21)  விஜயம் மேற்கொண்ட நிலையில், இன்று (22) ஞாயிற்றுக்கிழமை நயினாதீவு நாக விகாரைக்கு சென்றிருந்தனர்.

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ தலைமையிலான சுமார் 100க்கு மேற்பட்ட ஆதிவாசிகள் குழுவினரே யாழிற்கு விஜயம் செய்துள்ளதுடன் இவர்கள் யாழின் முக்கிய இடங்களை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.