400 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது!

133 0

400 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து பேர் தெய்வேந்திரமுனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு முன்னெடுத்த தேடுதலின் போது குறித்த ஐவரும் கைதாகினர்.

அவர்கள் பயணித்த படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் தெய்வேந்திரமுனை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.