இஸ்ரேல் மேற்குகரையின் அகதிமுகாமின் மீது மேற்கொண்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நுர் சாம்ஸ் அகதிமுகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கியநாடுகளின் நிவாரண முகவர் அமைப்பு யுஎன்ஆர்டபில்யூஏ தெரிவித்துள்ளது.

ஒரு இஸ்ரேலிய படைவீரர் கொல்லப்பட்டுள்ளார் பலர் காயமடைந்துள்ளனர் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து தனது சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

