வடக்கு ரயில் சேவை நேர அட்டவணை இன்று சனிக்கிழமை (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, யாழ்தேவி ரயில் உட்பட ஏனைய சில ரயில் சேவைகளின் ஆரம்ப நேரம் மாற்றப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
முன்னதாக யாழ்தேவி ரயில் காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படும். தற்போது, நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டதற்கு அமைய காலை 10.00 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில் யாழ்ப்பாணத்தை காலை 10.30 மணிக்கும் , கிளிநொச்சிக்கு காலை 11.35 மணிக்கும் வவுனியாவிற்கு நண்பகல் 12.50 மணிக்கும் சென்றடையும்.
பின்னர், அநுராதபுரத்திற்கு பிற்பகல் 1.45 மணிக்கும், மஹவவிற்கு பிற்பகல் 3.42 மணிக்கும், குருணாகலிற்கு மாலை 4.33 மணிக்கும் பொல்கஹவலையிற்கு மாலை 5.01 மணிக்கும் சென்றடையும்.
அதனை தொடர்ந்து, கொழும்பு கோட்டைக்கு மாலை 6.28 மணிக்கும், கல்கிஸைக்கு மாலை 6.51 மணிக்கும் சென்றடையவுள்ளது.


