ஸ்ருற்காட் பாரதி கலைக்கூடத்தின் மாணவியரும் லூட்விக்ஸ்பூர்க் தமிழாலத்தின் பரதக்கலை வகுப்பு மாணவிகளும் இணைந்து வழங்கிய வாணி விழா 2023.

1015 0

பரதக்கலை ஆசிரியர் திருமதி துர்க்கா ராமேஸ் அவர்களிடம் பரதக்கலை பயிலும் ஸ்ருற்காட் பாரதி கலைக்கூடத்தின் மாணவியரும் லூட்விக்ஸ்பூர்க் தமிழாலத்தின் பாதக்கலை வகுப்பு மாணவிகளும் இணைந்து வழங்கிய வாணி விழா 2023. வாணிவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன் அவர்களும் ஸ்ருற்காட் தமிழாலய நிர்வாகி திருமதி மடோனா பற்றிக் குலேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். வாணி பூசை, கலைநிகழ்வுகள் மற்றும் புதிய மாணவர் இணைவு போன்ற நிகழ்வுகளுடன் வாணிவிழா சிறப்பாக நிறைவடைந்தது.