இலங்கையின் மூத்த பாரம்பரிய நடன கலைஞர் ரஜினி செல்வநாயகம் வெள்ளிக்கிழமை (20) காலமானார்.
அவர் இறக்கும் போது அவருக்கு 71 வயதாகும்.
ரஜினி செல்வநாயகம் கலாசூரி மற்றும் கலா கீர்த்தி ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
அவர் ஒரு புகழ்பெற்ற நடன ஆசிரியை ஆவார், அவர் இலங்கை நடனக் கலையில் தனித்துவமானவர் என்பதோடு, தனது வாழ்க்கையை நடன கலைக்கு அர்ப்பணித்தவர்.
ரஜினி செல்வநாயகம் 1975 ஆம் ஆண்டில், “சாமர கலா நிகேதனயா” எனும் பெயரில் நடனப்பள்ளியை ஆரம்பித்தார்.இது நடனக் கலையின் மூலம் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களை மேம்படுத்தும் அடிப்படையிலான சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
அவரது இறுதிச் சடங்குகள் குறித்து விலைவில் அறிவிக்கப்படும்.

