சைட்டத்திற்கு எதிராக இருவேறு பகுதிகளில் ஆர்பாட்டம்

339 0

மாலம்பே சைட்டம் கல்லூரியை மூடக்கோரியும் சைட்டம் திட்டத்தை தடைசெய்யக் கோரியும் இருவேறு பகுதிகளில் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பல்கலைக்கழக மாணவர்களும் பொது மக்களும் இணைந்து கினிகத்தேன பகுதியிலும் லக்ஷபான பகுதியிலும் இன்று (26) காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சைட்டம் திட்டத்தினால் பொதுமக்களுக்கு கிடைக்கும் இலவச வைத்திய சேவை பாதிப்படைவதுடன் இலவச கல்வி முறைமையும் வியாபார மயமாகுவதாகவும் தெரிவித்தனர்.

சைட்டம் திட்டத்துக்கு எதிராக சுலோகங்கள் ஏந்தியவாறு கோசமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.