தனியார் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய கிளிநொச்சி – திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக அகழ்வுபணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று (20.10.2023) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் 17 அடி வரை அகழ்வு நடைபெற்ற போதிலும், பொருட்கள் எவையும் கிடைக்காத நிலையில் பணி இடைநிறுத்தப்பட்டது.
சம்பவ இடத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர், பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
மேலும், அகழ்வு பணி எதிர்வரும் (22.10.2023) அன்று மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

