மஹிந்தலை பிரதேசத்தில் வீடு ஒன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சீப்புகுளம் சந்தி பிரதேசத்தினை சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
குறித்த நபர், கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டு சிறைச்சாலையில் இருந்து அண்மையில் பிணையில் விடுதலையானவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

