ரூபாவின் பெறுமதியை மத்திய வங்கி நிர்வகிப்பதில்லை

397 0

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியை நிர்வகிப்பது மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுவதில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கூறியுள்ளார்.

மத்திய வங்கியினால் அது நிர்வகிக்கப்படுமானால் அந்நியச் செலாவணி வீணாக செலவிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இவ்வாறு கூறியுள்ளார்.

இதுதவிர செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைவது, நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடி ஏற்படுவதற்கு காரணமாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.