இலங்கையின் முக்கிய மூன்று மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்திய, போலியான மனித இம்யூனோகுளோபுலினை விநியோகம் செய்த அதே நிறுவனத்திடம் இருந்து மேலும் இரண்டு மருந்துகளை சுகாதார அமைச்சகம் கோரியிருந்தமை தெரியவந்துள்ளது.
உள்ளூர் நிறுவனம் ஒன்று போலி கையொப்பம் மற்றும் முத்திரையை பயன்படுத்தி இதற்கான கேள்வி பத்திரங்களை பெற்றுள்ளது.
மருந்துகளில் ஒன்று ‘ரிட்டுக்ஸிமாப்’ எனப்படும் மோனோக்ளோனல் பிறப்பொருள் எதிரியாகும். இது தாக்க நோய்கள் மற்றும் புற்றுநோய் வகைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
இந்தநிலையில் குறித்த உள்ளூர் நிறுவனத்திடம் இருந்து கோரப்பட்ட மற்றொரு மருந்து தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அந்த மருந்து தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.
இதேவேளை போலி ஆவணங்களை தயாரித்து மருந்துகளை அரச மருத்துவமனைகளுக்கு விநியோகித்த சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாளிகாகந்த நீதவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு, கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

