ரஸ்யாவின் பழுதுபார்த்தல் நிலையம் இலங்கையில் நிறுவப்படுகிறது

367 0

ரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட உலங்கு வானூர்திகளை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளது

ரஸ்யாவின் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு சேவையின் உதவி தலைவர் மிக்ஹெய்ல் பெட்டுவ்கொவ் இதனை தெரிவித்துள்ளார்

உலங்கு வானூர்திகளுக்கு உதிரிபாகங்களை வழங்குவது உட்பட்ட பணிகளை இந்த நிலையம் மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மலேசியாவில் இடம்பெறும் கண்காட்சி நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை இன்று குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் தற்போது எம் ஐ 8-17ரக உலங்குவானூர்திகள் 12, தாக்குதல் உலங்கு வானூர்திகள் 6, எம்எம்பி சண்டை உலங்குவானூர்திகள் 2, மற்றும் சுமார் 50 துருப்புக்காவிகள் என்பன இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.