
இதனையடுத்து பஸ்ஸிலிருந்த பயணியை விசாரணை செய்த போது போலியான பிஸ்டல் மற்றும் தெலிப்பி எனும் கத்தியும் கைப்பற்றப்பட்டதாகவும் சந்தேக நபரான கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை கடற்படை முகாமில் எஸ்.பீ.எஸ் பிரிவில் கடமையாற்றிவரும் சிலாபம்.கரவிடாகாரய பகுதியைச்சேர்ந்த
கே.ஏ.என்.என்.கருணாரத்ன (36வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளவர் எனவும் தெரியவருகின்றது.
குறித்த பஸ்ஸில் பயணித்த இருவரும் ஒரே கடற்படை முகாமில் வெவ்வேறு பிரிவுகளில் கடமையாற்றுபவர்கள் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த நபரை திருகோணமலை நீதிமன்றில் இன்ற சனிக்கிழமை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.