டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா பொலிசார் வழிப்புணர்வு பேரணி(காணொளி)

315 0

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா பொலிசார் வழிப்புணர்வு பேரணி ஒன்றை இன்று மேற்கொண்டனர்.

வவுனியா பொலிஸ் தலமையகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியாவில் இன்று காலை 9.00மணியளவில் டெங்கு விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது.

பேரணியை வவுனியா பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரி சோமரத்தின விஜியமுனி ஆரம்பித்து வைத்தார்.

பேரணியானது வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி, வவுனியா மணிக்கூட்டு சந்தியூடாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணையினை சென்றடைந்தது.

பின்னர் மீண்டு அதே வழியால் மணிக்கூட்டு சந்தியை வந்தடைந்து பஸார் வீதியுடாக ஹெரவப்பத்தானை வீதியை சென்றடைந்து றோயல் விடுதியில் நிறைவடைந்தது.

பேரணியில் வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸார், தொழிநூட்ப கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நீர் தேங்கும் இடங்களை இல்லாதொழித்தல், நீர் வடிந்தோடும் வடிகால் தொகுதிகளை முறையாக பேணுதல், டெங்கு இறப்பளிக்கும் நோயாகும், அடுத்த இரை நீங்களாயிருக்கலாம், தயது செய்து இருமுறை சிந்தியுங்கள் என பல்வேறு பதாதைகளை ஏந்திய வண்ணம் விழிப்புணர்வு நடைபவனியில் ஈடுபட்டனர்.