இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கில் ராக்கெட்டுகளை வீசிய பாலஸ்தீன குழு: உயிர் பிழைக்க சிதறி ஓடும் மக்கள்

171 0

ஜெருசலேம்: இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்படும் ஆயுதக்குழுக்கள் ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தின. முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்களை வீசியதாக அந்த குழுக்கள் தெரிவித்துள்ளன.

தரை வழியாகவும், கடல் வழியாகவும் இஸ்ரேலுக்குள் நுழைந்த நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்ரேலைச் சேர்ந்த பெண் உட்பட 22 பேர் உயிரிழந்தார். 545 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலும் விமானப்படை விமானங்கள் மூலம் காசா நகரில் தாக்குதலை துவக்கி உள்ளது. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் அல் அக்சா பிளட்

பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக்குழுவினர் காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்கு எதிராக போரை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ள அந்த அமைப்பினர், தங்களது நடவடிக்கைக்கு ‛ ஆபரேஷன் அல் அக்சா பிளட்’ என்ற பெயர் சூட்டி உள்ளனர்.

முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்களை ஏவியதாகவும் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் அனைத்து ஆக்கிரமிப்புகளுக்கு முடிவு கட்டுவோம் எனவும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.