பிரதமரை மாற்றும் புதிய அரசாங்கத்திற்கு வாசுதேவ ஆதரவு!

229 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான தரப்பும் இணைந்து வேறு ஒரு பிரதமருடன் கூடிய அரசாங்கத்தை நிறுவ நடவடிக்கை எடுத்தால் தமது கட்சி உட்பட கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு வழங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனநாயக இடதுசாரி முன்னணி கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் முடிந்தளவு விரைவில் மாற்றப்பட வேண்டும்.

அரசாங்கம் மாற்றம் என்பது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை மாற்றுவதாகும்.பிரதமர் தற்போது சமூகத்திற்கு எதிரான விடயங்களை நாட்டுக்குள் வியாபித்து வருகின்றார். பிரதமரை நீக்க முனையும் எந்த சந்தர்ப்பமாக இருந்தாலும் கூட்டு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும்.அரசாங்கம் சர்வஜன வாக்குரிமையை இல்லாமல் செய்ய முயற்சித்து வருகிறது. இது உயிர் நீத்து போவதற்கு இணையானது.

இந்த வருட இறுதிக்குள் அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும். அப்படி நடத்தாவிட்டால் இந்த அரசாங்கத்திற்கு ஆட்சியில் இருக்க முடியாத அளவில் தேசிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்படும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.