பாறையொன்று வீட்டின் மீது விழுந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் வியாழக்கிழமை (05) காலை காலியில் இடம்பெற்றுள்ளது.
அவர் தனது வீட்டில் இருந்தபோது பாறையுடன் மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் சுவரை இடித்துத் தள்ளியுள்ளது. அதில் சிக்குண்டே இவர் மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் சிலர். அந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்துள்ளனர் எனினும், அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.
வீட்டுக்கு மேலாக இருக்கும் மலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்தே இந்த பாறை, புரண்டுவந்துள்ளது என்றும் அறியமுடிகின்றது.

