சிறையில் இருந்து வெளியேறிய நபர் தங்க ஆபரணங்களுடன் மீண்டும் கைது

220 0

சிறைச்சாலையில் 8 வருடகாலம் தண்டனை அனுபவித்து வெளியேறிய நபர் ஒருவர் 50 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தலங்கம, தலாகென, முல்லேரியா மற்றும் பேதியாகொடை போன்ற பகுதிகளில் ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சந்தேக நபரிடம் இருந்து 10.4 கிராம் ஐஸ் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபரை இன்று புதன்கிழமை (04) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.