எழுத, வாசிக்க தெரியாதவர்களுக்கான சாரதி அனுமதி பத்திரத்துக்கான வாய்மொழி பரீட்சை

191 0
கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்துப் பிரிவு எழுதும், வாசிக்கும் திறன் குறைந்தவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான வாய்மொழிப் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி காரணங்களின் நிமித்தம் இதுவரை சாரதி அனுமதிப்பத்திரம் பெறத் தவறியவர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாமல், பயன்படுத்திக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்துப் பிரிவின் பிரதம மோட்டார் வாகன பரிசோதகர் G.H.D.K விஜயசேகர அறிவித்துள்ளார்.

மேலும், பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன் A9 வீதி, கிளிநொச்சி பழைய கச்சேரி வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்துப் பிரிவின் மாவட்ட காரியாலயத்துடன் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்வதுடன், மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.