விளையாட்டுத்துறை அமைச்சரின் குழுவிற்கு எதிராக உத்தரவு

166 0

ஶ்ரீலங்கா  கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக சிதத் வெத்தமுனி தலைமையிலான குழுவொன்றை நியமித்து விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி வரை மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் சமர்ப்பித்த ரிட் மனுவை பரிசீலித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி  நிஷங்க  பந்துல கருணாரத்ன மற்றும்  சமத் மொராயஸ்  ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.