சம்மாந்துறையில் காட்டு யானை தாக்கி பெண் பலி…!

189 0

காட்டு யானையின் தாக்குதல் காரணமாக குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நெய்னாகாடு வம்பியடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (02) இரவு  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காட்டு யானை தாக்குதலில் தனது குடும்பத்துடன் கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக இறக்காமம் பகுதிக்கு  மோட்டார் சைக்கிளில் இரவு வேளை பயணம் செய்த  பெண் ஒருவரே  இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

 

இவ்வாறு உயிரிழந்தவர் இறக்காமம் பகுதி  9 ஆம் பிரிவைச் சேர்ந்த 43 வயதுடைய புஹாரி சரீப் சிபானி  என்ற    3 பிள்ளைகளின் தாயாவார்.

இச்சம்பவம் தொடர்பில்   மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.