முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில்,
சட்டத்தின் ஆட்சி என்பது அதிகார பகிர்வு, பொறுப்புக்கூறல் என்பன போன்ற மாற்றுக்கருத்துகள் கொண்ட விடயமல்ல.
இங்கே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் உயிருக்கு அச்சுறுத்தல். நாட்டில் எஞ்சி இருந்த சட்ட_ஆட்சியும் நேரடியாக சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியவுடன் பதிலளிக்க வேண்டும். சட்டமாஅதிபர் சஞ்சய் ராஜரத்தினமும் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

