12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் “லொக்கு” வின் சகா கைது

169 0
12 இலட்சம் ரூபா மதிப்புள்ள 60 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 38 வயதான சந்தேக நபர் ஒருவர் தெஹிவளை, கவுடானை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வாகனத்தில் பயணித்த போது குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் இதற்கு முன்பும் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் மற்றும் கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி மக்களைத் தாக்கிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் பல காலமாக டுபாயில் தலைமறைவாகியுள்ள பட்டோவிட்ட ராஜித எனும் “லொக்கு” என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரின் போதைப்பொருள் கும்பலை வழிநடத்தும் நபர் என பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் கல்கிசை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.